4 மார்., 2011

பாப்ரி மஸ்ஜித்:அத்வானி, பால்தாக்கரே, முரளி மனோகர் ஜோஷிக்கு

புதுடெல்லி,மார்ச்.4:வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை இடிக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை மீண்டு விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் பரிசீலித்தது. இதனைத் தொடர்ந்து இதுத்தொடர்பாக விளக்கமளிக்கக்கோரி எல்.கே.அத்வானி உள்ளிட்ட சங்க்பரிவார் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு வாரங்களுக்குள்ளாக பதிலளிக்கவேண்டுமென நீதிபதிகளான வி.எஸ்.சிர்புர்கர் மற்றும் டி.எஸ்.தாக்கூர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடிக்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் அசோக் சிங்கால், உமாபாரதி, கல்யாண்சிங், கிரிராஜ் கிஷோர்,வினய் கத்தியார், விஷ்ணுஹரி டால்மியா, சாத்வி ரிதாம்பரா, மஹந்த் வைத்தியநாத் ஆகியோரையும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்திருந்தார்.

ஆனால், இவர்கள் மீதான சதித்திட்டம் தீட்டிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்தது சி.பி.ஐ. ஆனால், உயர்நீதிமன்றம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச்செய்தது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கிடையே வஞ்சகமான முறையில் மாறுபாட்டை உருவாக்கி 21 சங்க்பரிவார தலைவர்களை சி.பி.ஐ விசாரணை நீதிமன்றம் குற்றமற்றவர்களாக்கியது என சி.பி.ஐ சார்பாக ஆஜராகிய சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் வாதிட்டார். இதுத்தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியை மறுப்பதாகவும், பரிபூரணமான விசாரணை என்ற தத்துவத்தை மீறுவதாகவும் உள்ளது. மேலும் பலன்தரத்தக்க விசாரணையை தடுப்பதாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:அத்வானி, பால்தாக்கரே, முரளி மனோகர் ஜோஷிக்கு"

கருத்துரையிடுக